ஒபாமா ஹிரோஷிமா செல்லக்கூடும்

Hiroshima

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அடுத்த மாதம் ஜப்பான் செல்கிறார். அங்கு செல்வதன் முக்கிய நோக்கம் G7 கூட்டத்தில் கலந்துகொள்வது என்றாலும், அவர் ஹிரோஷிமாவில் உள்ள அணுக்குண்டு போடப்பட்ட இடத்துக்கும் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அவ்விடம் சென்ற அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் John Kerry அதுபற்றி ஒபாமா சிந்திப்பதாக கூறியுள்ளார். அவ்வாறு ஒபாமா குண்டு போடப்பட்ட இடம் செல்லின், இதுவே ஆட்சியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி அவ்விடம் செல்லும் முதல் நிகழ்வாகும்.
.
அவ்வாறு ஒபாமா அங்கு செல்வாராயின் அப்போது அவர் அனுதாபம் கூறக்கூடும். அதற்கு பதிலாக பெருமளவு ஜப்பானியர் ஒபாமா அணு ஆயுதங்களை முற்றாக இல்லாமல் ஒழிக்க அழைப்பு விடவேண்டும் என்று கருதுகிறார்கள். அதேவேளை பெரும்பாலான அமெரிக்கர் அனுதாபம்கூட தெரிவிக்கக்கூடாது என்று கருதுகின்றனர்.
.
1945 ஆம் ஆண்டு 6 ஆம் திகதி போடப்பட்ட குண்டுக்கு சுமார் 140,000 பேர் பலியாகி இருந்தனர். மூன்று நாட்களின் பின் நாகசாகியில் போடப்பட்ட குண்டுக்கு 74,000 பேர் வரை பலியாகி இருந்தனர்.
.

G7 கூட்டம் அடுத்த மாதம் 26ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெறும். இக்கூடத்துக்கு அங்கத்துவ 7 நாடுகளுடன் மேலும் சில நாட்டு தலைவர்கள் பார்வையாளர்களாக அழைக்கப்படலாம். அதில் இலங்கை ஜனாதிபதியும் அடங்கலாம். சீனாவுக்கு எதிரான ஒரு அமைப்பாக இயங்கும் இந்த G7 கூடத்தில் இலங்கை பங்கு கொள்வது ஒரு சங்கடமான நிகழ்வாக இருக்கும்.
.