ஒரே ஏவலில் 104 செய்மதிகளை அனுப்பியது இந்தியா

ISRO

இந்தியாவின் விண்வெளி அமைப்பான Indian Space Research Organization (ISRO) ஒரே ஏவலில் மொத்தம் 104 செய்மதிகளை விண்ணுக்கு அனுப்பி உள்ளது. ஒரே ஏவலில் செலுத்தப்பட்ட செய்மதிகளின் தொகைகளில் இதுவே அதிகம். இதற்கு முன், 2014 ஆம் ஆண்டில் ரஷ்யா 39 செய்மதிகளை ஒரே ஏவலில் அனுப்பி இருந்தது. ஏவப்பட்டு 30 நிமிடங்களில் 104 செய்மதிகளும் தமக்குரிய பாதைகளில் (orbits) பயணிக்க தொடங்கி உள்ளன.
.
மொத்தம் 104 செய்மதிகள் ஏவப்பட்டாலும் அதில் ஒரு செய்மதி மட்டுமே எடை கூடிய செய்மதியாகும். இந்தியாவுக்கு சொந்தமான அந்த செய்மதி 714 kg எடை கொண்டது. ஏனைய செய்மதிகள் மிகவும் சிறியவை. அவற்றுள் மிக சிறிய செய்மதி 1.1 kg எடை கொண்டது.
.
மொத்தம் 104 செய்மதிகளுள், 96 செய்மதிகள் அமெரிக்க நிறுவனங்களுக்கு சொந்தமானவை. ஏனையவை இஸ்ரேல், கசகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சலாந்து, UAE ஆகிய நாடுகளுக்கு சொந்தமானவை. இவைகளை ஏவும் பணியை மட்டுமே இந்தியா செய்துள்ளது.
.
இந்தியாவில் செய்மதி ஒன்றை ஏவ செலவாகும் தொகை  அச்செய்மதியை அமெரிக்காவில் ஏவ செலவாகும் தொகையின் சுமார் 10% மட்டுமே. அதனாலேயே அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவை நாடுகின்றன.
.

2013 ஆம் ஆண்டில் இந்தியா $73 மில்லியன் செலவில் செவ்வாய் கிரகத்துக்கு செய்மதி ஒன்றை அனுப்பி இருந்தது. அவ்வாறு அமெரிக்காவின் NASA செய்வாய் கிரகத்துக்கு அனுப்பிய செய்மதியின் செலவு $671 மில்லியன்.
.