ஒரே பார்வையில் 5 கோள்கள்

5Planets

இந்த மாதம் 20 ஆம் திகதி முதல் (January 20) அடுத்த மாதம் 20 ஆம் திகதி (February 20) வரை உலகின் பல பாகங்களில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 5 கோள்களையும் ஒரே பார்வையில் பார்க்கலாம் என்று வானிலை அவதானிகள் கூறுகிறார்கள். 2004 ஆம் ஆண்டின் இறுதி இரு கிழமைகளிலும் 2005 ஆம் ஆண்டின் முதல் இரு கிழமைகளிலும் இவ்வாறு 5 கோள்களையும் பார்க்க சந்தர்ப்பம் இருந்திருந்தது.
.
சூரிய உதயத்துக்கு சுமார் ஒரு மணித்தியாலம் முன்பே இந்த 5 கோள்களையும் பார்ப்பது சுலபம். அத்துடன் புதன் வானத்தின் அடியில் தோன்றுவதால் மரங்கள் அல்லது கட்டடங்கள் இல்லாத நிலையத்தில் இருந்து பார்பதுவும் முக்கியம். அடுத்த மாதம் 5 ஆம், 6 ஆம் திகதிகள் மிகவும் சிறப்பான நாட்கள் ஆகும், முகில் இல்லை என்றால்.
.
வியாழன் முதலில் வானில் மேலெழும். ஏனைய நான்கும் சில மணி நேரத்தின் பின்பே தோன்றும். இரண்டாவதாக செவ்வாயும், பின்னர் வெள்ளியும், சனியும், இறுதியாக புதனும் வானில் மேலெழும்.
.

இவை வானத்தின் தெற்கு-தென்கிழக்கு பகுதில் தோன்றும்.
.

Image: New York Times