ஒலிம்பிக் கொடியின்கீழ் இந்திய வீரர்

India-Sochi

ரஷ்யாவின் Sochi என்ற இடத்தில் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது ஒலிம்பிக்கின் winter விளையாட்டுக்கள். வழமையாக மிகப்பெரிய அளவில் நடைபெறும் ஒலிம்பிக்கின் summer விளையாட்டுக்களுக்கே இந்தியா அனுப்பும் வீரர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களில் இருக்க, winter விளையாட்டுக்கு 3 வீரர்களை மட்டுமே இந்தியா அனுப்புவது ஒன்றும் அதிசயமல்ல.

ஆனால் இந்த 3 இந்திய வீரர்களும் இந்திய தேசிய கொடிக்கு கீழ் விளையாடுவதற்க்கு பதிலாக ஒலிம்பிக் கொடியின் கீழ் விளையாட உள்ளார்கள். இந்த அவமானத்துக்கு காரணம் Indian Olympic Association.

International Olympic Committee (IOC) யின் சட்டப்படி உறுப்பு நாட்டு கிளைகள் குற்றவாளிகளை கிளை பதவிகளுக்கு அமர்த்துவது குற்றம். ஒலிம்பிக் சட்டம் அவ்வாறு இருக்க Indian Olympic Association அதன் செயலாளர் நாயகமாக 10 மாதம் சிறை சென்ற Lalit Bhanot ஐ 2012 ஆம் ஆண்டில் தெரிவு செய்திருந்தது. Lalit Bhanot இந்தியாவின் டில்லியில் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற Commonwealth விளையாட்டுக்களின் போது பெற்றிருந்த இலஞ்சம் காரணமாகவே சிறை சென்றிருந்தார். இவரை நீக்கி புதிய ஒருவரை வரும் 9ஆம் திகதியே Indian Olympic Association தெரிவு செய்யவுள்ளது – அதாவது போட்டி ஆரம்ப தினத்துக்கு இரண்டு நாட்கள் பின்னர். அதனால் இந்திய கொடிக்கு இந்த winter ஒலிம்பிக்கில் இடம் இல்லை.

மூன்று இந்திய வீரர்களில் ஒருவரான Shiva Kesavan என்பவர் இது இந்தியாவுக்கு “அவமானம்” என்றுள்ளார். அவர் மேலும் கூறுகையில் “உலகெங்கும் உள்ள மக்கள் எமது குளறுபடிகள், இலஞ்சம் வழங்கல் போன்றவற்றை அறிவார்கள்” என்றுள்ளார்.