கடனை அடைக்க $1 பில்லியன் கடன்

SriLanka

இந்த வருடம் செலுத்த வேண்டிய கடன்களை அடைக்கும் நோக்கில் இலங்கை மேலும் $1 பில்லியன் கடனை China Development Bank என்ற வங்கி மூலம் பெறுகிறது. இந்த புதிய கடனுக்கு இலங்கை சராசரியா 5.3% வட்டியை செலுத்தும் என்றும் கூறப்படுகிறது.
.
இந்த கடன் வரும் 8 வருடங்களுள் அடைக்கப்படல் வேண்டும். நாலாம் வருடம் முதல் எட்டாம் வருடம் வரையான 5 வருட காலத்தில் 6 மாதங்களுக்கு $100 மில்லியன் என்ற வேகத்தில் இக்கடன் அடைக்கப்படும்.
.
மேற்படி கடனை வழங்க மேலும் 3 தரப்புகள் முன்வந்திருந்தாலும், அவை கடனை 3 வருடங்களுள் திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை கொண்டிருந்ததால் China Development Bank தெரிவு செய்யப்பட்டுள்ளது.
.

2019 ஆம் ஆண்டில் $4.3 பெறுமதியான வேறு கடன்கள் அடைக்கப்படல் வேண்டும். இந்த கடன்கள் முன்னைய அரசின் காலத்தில் பெறப்பட்டன என்று கூறப்படுகிறது.
.