கணவனின் கடவுசீட்டில் பறந்த மனைவி

Emirates

இந்திய வம்ச பெண் ஒருவர் பிரித்தானியாவின் Manchester நகரில் இருந்து Dubai மூலம் இந்தியாவின் புதுடெல்லி நகர்வரை தனது கணவனின் கடவுசீட்டில் பறந்துள்ளமை பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்த பெண்ணை கணவனின் கடவுசீட்டில் எடுத்து வந்த Emirates விமானசேவை தவறை ஏற்றுகொண்டுள்ளது.
.
கடந்த மாதம் 23ஆம் திகதி (April 23) Geeta Modha என்ற பெண் Manchester நகரில் இருந்து Dubai மூலம் புதுடில்லி நகர் பறக்கவிருந்தார். அவர் தனது கடவுசீட்டுக்கு பதிலாக தவறுதலாக தனது கணவன் கடவுசீட்டை எடுத்து சென்றுள்ளார். இவரின் பொதிகளை ஏற்றுக்கொண்டு, boarding pass, வழங்கி டுபாய் வரை எடுத்துச்சென்ற Emirates விமான சேவை தவறை காணவில்லை. இந்நாளில் அது எப்படி சாத்தியம் என்பதே Emirates மீதான கேள்வி.
.
Dubai விமான நிலையத்திலும் தவறு கண்டுபிடிக்கப்படவில்லை. Dubai முதல் புதுடில்லி வரையான விமான சேவையின்போதும் தவறு கடுபிடிக்கப்படவில்லை.
.
புதுடில்லி விமான நிலத்திலேயே, இந்திய அதிகாரிகளால் தவறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணிடம் உரிய கடவுசீட்டு இல்லாமையால் அவர் இந்தியாவுள் புக அனுமதி வழங்கப்படவில்லை. அவர் Dubai நகருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
.
Dubai விமான நிலையத்தில் தங்கி இருந்த இவருக்கு உரிய கடவுசீட்டு Manchester நகரில் இருந்து அனுப்பப்பட்டு பின் அப்பெண் மீண்டும் புதுடில்லி சென்றார்.
.

தவறுக்கான விசாரணைகள் தொடர்கின்றன என்கிறது Emirates.
.