கணவனின் மரண நாடகத்துக்கு குடும்பம் பலி

ChinaFlag

சீனாவின் Hunan மாகாணத்தில் கடன் தொல்லை காரணமாகவும், காப்புறுதி பணம் பெறும் நோக்கிலும் He என்ற கணவன் தனது பொய் மரண நாடகத்தை நடாத்தி உள்ளார். கணவனின் மரணம் உண்மை என்று கருதிய மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் குளம் ஒன்றுள் வீழ்ந்து தற்கொலை செய்துள்ளார்.
.
சுமார் $14,400 கடனில் இருந்த கணவன் அந்த கடனில் இருந்து தப்பிக்கொள்ளவும், தனது மனைவி பிள்ளைகளுக்கு காப்புறுதி பணம் கிடைக்கும் என்று கணக்கிட்டும் விபத்து நாடகம் ஒன்றை நடாத்தி உள்ளார். கடந்த செப்ரெம்பர் மாதம் 19 ஆம் திகதி அவர் வாடகை கார் ஒன்றை பெற்று, அதை ஆறு ஒன்றுள் வீழ்த்திவிட்டு, தலைமறைவாகி உள்ளார்.
.
இந்த விடயத்தை அவர் மனைவியிடம் கூறி இருந்திருக்கவில்லை. அவரின் நோக்கம் சிலகாலம் தலைமறைவில் இருந்து, பின் மனைவியையும் அழைத்து தொடர்ந்தும் தலைமறைவாக வாழ்வதே.
.
தனது கணவர் உண்மையிலேயே மரணமாகிவிட்டார் என்று கருதிய மனைவி, கடந்த 11 ஆம் திகதி, தனது இரண்டு குழந்தைகளுடன் குளம் ஒன்றும் வீழ்ந்து தற்கொலை செய்துள்ளார். செய்தியை அறிந்த கணவன் மறுநாள் 12 ஆம் திகதி போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார். சரண் அடைந்த கணவன் உண்மையை போலீசாரிடம் கூறியுள்ளார்.

.