கனடாவில் மிகக்கூடிய தினசரி கரோனா தொற்று

கனடாவில் மிகக்கூடிய தினசரி கரோனா தொற்று

இன்று ஞாயிற்றுக்கிழமை கனடாவின் ஒன்ராரியோ (Ontario) மாகாணம் தெரிவித்த கூற்றின்படி கடந்த 24 மணித்தியாலத்தில் அங்கு புதிதாக 4,456 பேருக்கு காரோனா தொற்றி உள்ளமை அறியப்பட்டு உளது. அங்கு இதுவே தொற்றின் மிகப்பெரிய தினசரி தொகை. ஒரு ஆண்டுக்கு மேலாக பரவும் கரோனா தொற்றின் 3ம் அலை தற்போது கனடாவை தாக்குகிறது. இன்று மட்டும் 21 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இந்நிலை தொடர்ந்தால் அங்கு ICU (Intensive Care Unit) படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. ஒன்ராரியோ முழுவதும் மொத்தம் 2,300 ICU படுக்கைகள் உண்டு என்று கூறப்பட்டாலும், அவற்றில் சேவையாற்ற தற்போது போதிய தாதிகள் இல்லை.

சிறுவர்களுக்கு சேவை வழங்கும் Toronto நகரின் Hospital for Sick Children தனது 8 ICU படுக்கைகளை 40 வயது வரையானோர்க்கு வழங்க முன்வந்துள்ளது.

கனடாவில் தற்போது 20 முதல் 39 வயது வரையானோர் மத்தியிலேயே காரோனா அதிக அளவில் பரவுவதாக கனடிய அரசு கூறியுள்ளது.

மூன்றாம் அலையின் தாக்கத்தை குறைக்க சனிக்கிழமை முதல் ஒன்ராரியோவில் அவசரகாலமும், முடக்கமும் நடைமுறை செய்யப்பட்டு உள்ளன.