கனடாவுக்கான mask ஏற்றுமதியை ரம்ப் தடுத்தார்

3M_N95
.
கனடாவின் வைத்தியசாலைகளுக்கு தேவையான N95 mask களை அமெரிக்காவின் 3M என்ற நிறுவனமே வழங்கி வந்துள்ளது. ஆனால் அவ்வாறு 3M கனடாவுக்கு mask களை ஏற்றுமதி செய்வதை அமெரிக்க சனாதிபதி ரம்ப்  தடுத்துள்ளார். அதனால் விசனம் கொண்டுள்ளனர் கனடிய பிரதமர்.
.
ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கான அமெரிக்க-கனடிய எல்லை பகுதிகளில் வாழும் கனடிய வைத்திய ஊழியர்கள் கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று பணிபுரிவதையும் பிரதமர் ரூடோ சுட்டி காட்டியுள்ளார்.
.
அத்துடன் பெர்லின் (ஜெர்மன்) போலீசாருக்கு எடுத்து செல்லப்பட்ட 200,000 FFP2 வகை mask களையும் அமெரிக்கா இடைமறித்து, தமக்கு எடுத்துள்ளது. இவ்வாறு அமெரிக்கா இடைமறித்து எடுத்ததை கடல் கொள்ளை (piracy) என்று கூறியுள்ளார் ஜெர்மனியின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் Andreas Geisel. இவையும் அமெரிக்காவின் 3M நிறுவனத்தால் செய்யப்பட்டவையே.
.
அண்மையில் ரம்ப் அமெரிக்காவின் Defense Production Act என்ற சட்டத்தை நடைமுறை செய்திருந்தார். அதன்படி அமெரிக்காவுக்கு தேவையான பொருட்களை அந்நாட்டு நிறுவனங்கள் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது.
.
டிசம்பர், ஜனவரி, பெப்ருவரி ஆகிய மாதங்களில் கொரோனா வைரஸ் அமெரிக்காவை அடையாது என்ற நம்பிக்கையில் ரம்ப் இருந்திருந்தார். அதனால் அமெரிக்க அரசு வரைஸ் தாக்கத்துக்கு தன்னை தயார் படுத்தவில்லை. ரம்பின் எதிர்பார்ப்புக்கு முரணாக கொரோனா அமெரிக்காவை பலமாக தாக்கியது. தற்போது அமெரிக்கா mask போன்ற அவசிய பொருட்களுக்கு அவதிப்படுகிறது.
.
ஏற்கனவே சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் பெருமளவு mask போன்ற உபகரணங்களை அமெரிக்காவுக்கு வழங்கி உள்ளன.
.
Respiratory Mask
N95 (அமெரிக்கா) = FFP1 (ஐரோப்பா): 95% 0.3 micron களை தடுக்கும்
.
N99 (அமெரிக்கா) = FFP2 (ஐரோப்பா):  99% 0.3 micron களை தடுக்கும்
.
N100 (அமெரிக்கா) = FFP2 (ஐரோப்பா): 99.97% 0.3 micron களை தடுக்கும்
.