கனடிய திரைகளிலிருந்து தெறி இடைநிறுத்தம்

Theri

அண்மையில் வெளியான விஜயின் திரைப்படமான ‘தெறி’ திரையிடப்படல் கனடாவில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. Scarborough, Brampton, Mississauga ஆகிய இடங்களில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த திரை அரங்கு ஒன்றில் கெடுதியான வாயு பரவல் இடம்பெற்றதால் பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, திரையிடலும் நிறுத்தப்பட்டது. பின்னர் Richmond Hill நகரில் இன்று மேலும் ஒரு திரையரங்கு அப்படத்தை திரையிடலை நிறுத்தி உள்ளது. பொலிசார் சம்பவத்தை விசாரணை செய்கிறார்கள்.
.
முதல் 6 நாட்களில், உலக அளவில் இப்படம் சுமார் 100 கோடி ($15 மில்லியன்) உழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பின்வரும் தொகைகளும் அடங்கும்: 52 பிரித்தானிய திரைகளில் $467,000, பிரான்சில் $282,000, 17 ஆஸ்திரேலிய திரைகளில் $265,000. தமிழ்நாட்டில் 425 திரைகளில் இப்படம் 48 கோடி ரூபாய்களை உழைத்துள்ளது.
.
சர்வதேச நாடுகளில் இப்படத்தை திரையிடும் உரிமையை Cine Galaxy நிறுவனம் 3 கோடி பணத்துக்கு ($450,000) பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வகை உரிமைக்கு 1 கோடிக்கு மேல் இந்தப்படத்துக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
.