கராச்சி விமானநிலையம் மீது தாக்குதல், 23 பலி

KarachiAttack

பாகிஸ்தானின் பிரதான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான கராச்சி விமான (Muhammad Ali Jinnah International Airport) நிலையம் மீது குறைந்தது 10 ஆயுததாரிகள் தாக்கியதில் மொத்தம் 23 நபர்கள் வரை பலியாகியுள்ளனர். மேலும் 23 நபர்கள் வரை காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் உள்ளூர் நேரப்படி ஞாயிறு இரவு 11:00 மணியளவில் ஆரம்பித்திருந்துள்ளது. உடனடியாக விமான சேவைகள் திசை திருப்பப்பட்டன.

சுமார் 5 மணித்தியாலங்களில் படையினர் 10 தாக்குதல்காரர்களை கொலை செய்து நிலைமையை கட்டுப்பாட்டுள் கொண்டுவந்துள்ளனர். ஞாயிரு மாலை விமான சேவைகள் ஆரம்பிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆயுததாரர்களில் 5 பெயர்கள் பிரதான வாசல் ஒன்றின் மூலம் தாக்கியபடி நுழைந்ததாகவும், மற்றைய 5 பெயர்களும் சுவர் ஒன்றை உடைத்து நுழைந்ததாகவும் கூறப்படுகிறது.