கருணாநிதி வீட்டுக்கு மோதி தீடிர் பயணம்

Modi

நோய்வாய்ப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை இன்று இந்திய பிரதமர் கருணாநிதியின் வீட்டில் சந்தித்து சுகம் விசாரித்து உள்ளார். பாரதீய கட்சியை சார்ந்த மோதியின் இந்த திடீர் பயணம் இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசியல் தொடர்பான சந்தேகங்களை அவிழ்த்து விட்டுள்ளது.
.
மோதியின் கருணாநிதியின் கோபாலபுர வீட்டுக்கான பயணம் இறுதிவரை இரகசியமாகவே வைக்கப்படுள்ளது. இன்று திங்கள் காலை 8:37 மணிக்கே BJP செயலாளர் Muralidhar Raoவினால் Tweeter மூலம் அறிவிக்கப்பட்டது. சுமார் 12:15 PM அளவில் கோபாலபுரம் சென்ற மோதி கருணாநிதியின் வீட்டில் 10 நிமிடங்கள் செலவிட்டு இருந்தார்.
.
கருணாநிதியை சந்தித்தது மட்டுமல்லாது, அவரை தனது டில்லி தங்குமிடம் வந்து தங்கி ஓய்வு பெருமாறும் கேட்டுள்ளார் மோதி. தற்போது பேச முடியாத கருணாநிதி ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக வழங்கினாராம்.
.
மோதி கருணாநிதியை சந்தித்தபோது, கூடவே மகன் ஸ்டாலின், மக்கள் கனிமொழி ஆகியோரும் கூடவே இருந்தனர்.
.