புதிய வகை கரோனாவால் பிரித்தானிய கடும் முடக்கத்தில்

புதிய வகை கரோனாவால் பிரித்தானிய கடும் முடக்கத்தில்

ஒரு புதிய வகை (variant) கரோனா பிரித்தானியாவின் தெற்கு, மற்றும் கிழக்கு பகுதிகளில் பரவி உள்ளதால் இப்பகுதிகள் கடுமையான முடக்கப்படுள்ளன. இப்பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து மட்டுமல்லாது, பிரித்தானியாவின் ஏனைய பகுதிகளில் இருந்தும் பாரிய அளவில் பிரிக்கப்பட்டு உள்ளன.

அயர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகள் பிரித்தானியாவுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தி உள்ளன.

Folkestone முதல் Calais வரையான ரயில் சேவையும் துண்டிக்கப்படுகிறது. ஆனால் Calais முதல் Folkestone வரையான சேவை தொடர்ந்தும் இயங்கும்.

இந்த புதிய வகை முன்னைய வகையிலும் 70% அதிகமாக பரவும் வல்லமை கொண்டது என்று பிரதமர் Boris Johnson கூறியுள்ளார். ஆனாலும் இதன் பாதிப்பு தம்மை முன்னையதுக்கு நிகரானதே.

ஞாயிறுக்கிழமை 1,100 பேர் லண்டன் நகரில் இந்த புதிய வகையை கொண்டிருந்தது அறியப்பட்டுள்ளது. இந்த வகை தென்னாபிரிக்காவில் உள்ளமை கடந்த கிழமை அறியப்பட்டு இருந்தது.

இந்த கடுமையான முடக்கம் குறைந்தது டிசம்பர் 30ம் திகதிவரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.