கரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை கட்டுப்படுத்தும் மேற்கு

கரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை கட்டுப்படுத்தும் மேற்கு

கரோனா தடுப்பு மருந்தை இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகிய வளர்முக நாடுகள் உற்பத்தி செய்வதை மருந்துகளுக்கான உரிமைகளை கொண்ட அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்ற செல்வந்த மேற்கு நாடுகள் தடுப்பதாக கூறப்படுகிறது.

மேற்படி தடுப்பு மருந்துகளை ஆய்வுகள் மூலம் மேற்கின் நிறுவனங்கள் தயாரித்து இருந்தாலும், அந்த மருந்துகளுக்கான IP உரிமைகளை (Intellectual Property Rights) தற்காலிகமாக தவிர்த்து தயாரிப்பு வசதிகள் கொண்ட அனைத்து நாட்டு நிறுவனங்களையும் உற்பத்தி செய்ய அனுமதித்தால் விரைவில் வளர்முக நாடுகளும், வறிய நாடுகளும் கரோனாவை அழிக்க முடியும்.

ஆனால் வருமானம் நோக்கம் கொண்ட மேற்கின் நிறுவனங்கள் தமது அரசுகள் மூலம் வார்முக நாடுகள் சுதந்திரமாக தடுப்பு மருந்துகளை தயாரிப்பதை தடுத்து வருகின்றன. உலக வர்த்தக அமைப்பான WTO கொண்டுள்ள TRIPS (Trade-Related Aspects of Intellectual Property Rights) என்ற உடன்படிக்கை தற்காலிகமாக மருந்து உரிமைகளை கைவிட வழி செய்தாலும், மேற்கின் அரசுகள் அவ்வாறு செய்ய மறுத்து வருகின்றன.

இந்தியா, தென் ஆபிரிக்கா மட்டுமன்றி கியூபா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளும் பெருமளவு தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் வசதிகளை கொண்டுள்ளன. ஆனால் உரிமை இன்றி அவை மேற்கின் மருந்துகளை தயாரிக்க முடியாது.

உரிய உரிமையை AstraZeneca விடமிருந்து பெற்றதாலேயே இந்தியாவின் Serum நிறுவனம் AstraZeneca காரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கிறது.

அதேவேளை வறிய நாடுகளுக்கென COVAX/Gavi திட்டம் மூலம் WHO ஓதுக்கிய AztraZeneca கரோனா தடுப்பு மருந்துகளில் 1.9 மில்லியன் மருந்துகளை கனடா பெற முனைகிறது.