கரோனா 28 தினங்கள் மேற்பரப்புகளில் உயிர்வாழும்

கரோனா 28 தினங்கள் மேற்பரப்புகளில் உயிர்வாழும்

கொரோன பண தாள், தொலைபேசி, stainless steel போன்றவற்றில் 28 தினங்கள் உயிர்வாழும் என்று கூறுகிறது அஸ்ரேலிய ஆய்வு அமைப்பான CSIRO (Commonwealth Scientific and Industrial Research Organization). இந்த புதிய ஆய்வின்படி கரோனா முன்னர் கூறியதிலும் அதிக காலம் உயிருடன் இருபது அறியப்பட்டு உள்ளது.

மேற்படி ஆய்வு இருண்ட, 20 C வெப்பநிலையில் உள்ள ஆய்வுகூடம் ஒன்றில் செய்யப்பட்டது. ஆனால் வெளி இடங்களில் உள்ள UV கதிர்வீச்சு கரோனாவை வேகமாக அழிக்கும் இயல்பு கொண்டது.

சாதாரண flu வைரஸ் மேற்படி சூழ்நிலையில் 17 தினங்கள் மட்டுமே உயிர்வாழும்.

அத்துடன் வெப்பநிலை 40 C ஆக இருப்பின், கரோனா 24 மணி நேரமே தொற்றக்கூடிய நிலையில் இருக்கும் என்கிறது மேற்படி ஆய்வு.

அமெரிக்காவின் ஆய்வின்படி கரோனா உலோகங்கள், கண்ணாடி, பிளாஸ்டிக் போன்ற மேற்பரப்புகள் மூலமும் பரவும். கரோனா தொற்றிய ஒருவர் தொட்ட மேற்பரப்பை சுகதேகி ஒருவர் தொட்டால் சுகதேகியையும் கரோனா தொற்றும்.

ஆனால் வேறுசில ஆய்வாளர் கரோனா 28 தினங்கள் உயிர் வாழ்வதை மறுத்து உள்ளனர். University of California பேராசிரியர் Monica Gandhi கரோனா மேற்பரப்புகள் மூலம் பரவவில்லை என்று கூறியுள்ளார். Rutgers University பேராசிரியர் Emanuel Goldman மேற்பரப்பு மூலம் கரோனா பரவுவது மிக குறைவு என்று கூறியுள்ளார்.

சுமார் ஒரு ஆண்டின் பின்னரும் விஞ்ஞானமும் கரோனாவை திடமாக அறிய முடியாது தவிக்கிறது.