கலிபோர்னியாவில் கட்டுக்கடங்கா காட்டுத்தீ

CaliWildfire

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தற்போது காட்டுத்தீ காலம். இன்று சனிக்கிழமை இரவு வரை 2 தீயணைப்பு படையினரும், 3 பொதுமக்களும் (70 வயது, 5 வயது, 4 வயது) இந்த தீகளுக்கு பலியாகி உள்ளனர். அத்துடன் சுமார் 327 சதுர km பரப்பளவு (80,906 ஏக்கர்) காடுகளும், குடியிருப்பு பகுதிகளும் எரிந்து சாம்பலாகி உள்ளன.
.
Redding என்ற நகரில் மட்டும் 38,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.
.
அதீத வெப்பம் மட்டுமன்றி, பலத்த காற்றும் தீ வேகமாக பரவ காரணமாக உள்ளது. அத்துடன் வேகமான காற்று தீயணைக்கும் பணிகளுக்கும் இடராக உள்ளது.
.
இதுவரை சுமார் 5% தீ மட்டுமே அணைக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியாவின் தீயணைப்பு அதிகாரி Ken Pimlott கூறியுள்ளார். கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் தற்போது 14 இடங்களில் பாரிய தீகள் ஏற்பட்டுள்ளன.
.
அங்கு சுமார் 10,000 தீயணைப்பு படையினர் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களுக்கு உதவியாக தீயணைப்பு விமானங்கள், ஹெலிகள் என்பனவும் உள்ளன.
.