கலிபோர்னியாவில் காட்டுத்தீக்கு 21 பேர் பலி

WildFire

அமெரிக்காவை வருடாந்தம் சுற்றவாளிகள் ஒருபுறம் பாதிக்க, காட்டுத்தீ (wildfire) மறுபுறம் பாதிப்பது வளமை. தற்போது கலிபோர்னியாவில் இடம்பெறும் காட்டுத்தீக்கு குறைந்தது 21 பேர் இன்று புதன்கிழமை வரை பலியாகி உள்ளனர். அத்துடன் சுமார் 3,500 வீடுகளும், கட்டிடங்களும் எரிந்து சாம்பலானதோடு, சுமார் 170,000 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக எரிந்துள்ளது. மேலும் அப்பகுதியில் வாழும் குறைந்தது 560 பேர் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளனர்.
.
கலிபோர்னியா மாநிலத்தில், San Francisco நகருக்கு வடக்கே உள்ள Sonoma மற்றும் Napa பகுதிகளும், அவற்றை அண்டிய பகுதிகளுமே பெருமளவு பாதிப்பை அடைந்துள்ளன. இந்த மாநிலத்தில் தற்போது மொத்தம் 22 பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது.
.
சுமார் 8,000 தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இப்பகுதிகள் பொதுவாக மலை பகுதிகள் என்றபடியால் தப்பியோட வழிகளும் குறைவே. அத்துடன் தீயணைப்பு படைகளின் நடமாட்டமும் மட்டுப்படுத்தப்பட்டதே.
.
ஞாயிரு இரவு வீசிய 125 km/h அளவிலான காற்றே நிலைமையை மோசமாக்கி உள்ளது. இக்காற்றுக்கு தீ வேகமாக பரவியுள்ளது.

.