கல்கத்தாவில் களவாடப்படும் சிசுக்கள்

Calcutta

இந்தியாவின் கல்கத்தா நகர் பகுதியில் பிறந்த சிசுக்கள் உடனடியாக களவாடப்பட்டு பெருந்தொகை பணத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன. ஆகக்கூடிய விலையில் அழகான ஆண் சிசுக்கள் இந்திய 700,000 ரூபாய் வரையிலும், கருப்பான பெண் சிசுக்கள் மிக குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்படுகிறதாம்.
.
இந்திய CID போலீஸ் அதிகாரிகள் Baduria என்ற இடத்து வீடு ஒன்றில் இருந்து 3 சிசுக்களை அண்மையில் மீட்டு உள்ளார். இச்சிசுக்கள் அங்குள்ள ஓர் கிறீஸ்தவ பொதுச்சேவை நிலையம் ஒன்றுக்கு எடுத்து செல்லப்பட இருந்தனர் என்று அறியப்படுகிறது. சில தினங்களின் பின் மேலும் 10 பெண் சிசுக்கள் மீட்கப்பட்டு உள்ளனர். மீட்கப்பட்ட இந்த சிசுக்கள் ஒரு மாதம் முதல் 10 மாதம் வயதிலானவர்.
.
சுமார் 45 முதல் 50 சிசுக்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என்று அப்பகுதி CID போலீஸ் அதிகாரியான ராஜேஷ் குமார் கூறியுள்ளார்.
.

போலீசார் இதுவரை 20 சந்தேக நபர்களை கைது செய்துள்ளார். இவர்களுள் வைத்தியர்களும், தாதிகளும் அடங்குவர். Dilip Ghosh என்ற வைத்தியரும், Nityananda Biswas என்ற வைத்தியரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று போலீஸ் அதிகாரி Meena கூறியுள்ளார்.
.