கல்கத்தாவில் மேம்பாலம் உடைந்து 21 பேர் பலி

KolkataOverpass

இந்தியாவின் கல்கத்தா நகரில் தற்பொழுது கட்டப்பட்டுவந்த மேம்பாலம் (overpass) ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 21 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். 100 மீட்டர் நீளம் கொண்ட பகுதி ஒன்றே உடைந்து வீழ்ந்துள்ளது.
.
காயமடைந்த சுமார் 70 பேர் கல்கத்தாவில் உள்ள இரண்டு மருத்துவ நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளனர். தற்போது இராணுவம் அகப்பட்டோரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
.

இந்த மேம்பாலம் அமைப்பு வேலை மேலும் இரண்டு வருடங்களில் முற்றுபெற இருந்தது.
.