காலிமுக Shangri-La 50% வரை விற்பனை

Shangri-La

இலங்கையின் காலிமுக திடலுக்கு மறுபுறம் கட்டப்பட்டு வரும் One Galle Face என்ற ஷங்கிரி-ல (Shangri-La) மாடி வீடுகளின் (condo) 50% வரை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக அதன் அதிகாரி Rajeev Garg கூறியுள்ளார். இந்த வீடுகளை பெரும்பாலும் வெளிநாடுகள் சென்ற இலங்கையரும், அந்நிய நாட்டவருமே கொள்வனவு செய்துள்ளனர் என்றும் கூறப்பட்டு உள்ளது.
.
இந்த வீடுகளில் மிக சிறிய, 3 அறைகளை கொண்ட 1,700 சதுர-அடி வீடுங்கள் சுமார் U$ 800,000 க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாம். Hong Kong நிறுவனம் ஒன்று இந்த திட்டத்தை $450 மில்லியன் செலவில், 10 ஏக்கர் (10 acres) நிலத்தில் செய்துவருகிறது. இதன் கட்டட வேலைகள் 2017 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது.
.
இதில் அமையவுள்ள 390 வீடுகளும் இந்து சமுத்திரத்தை பார்க்கும் வகையில் அமையும். அத்துடன் shopping mall, அலுவலகங்கள், உணவகங்கள், நீர்த்தடாகம் என்பனவும் இங்கு அமையும்.
.
Shangri-La வுக்கும் அம்பாந்தோடையிலும் ஒரு 300 வீடுகளை கொண்ட கட்டடம் உண்டு. அது 145 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது.
.