காஸ்பியன் கடலில் ஐந்து நாடுகள் இணக்கம்

CaspianSea

காஸ்பியன் கடலை சூழவுள்ள ஐந்து நாடுகளும் இன்று ஞாயிறு அக்கடலுள் எல்லைகளை தீர்மானிக்க இணங்கி உள்ளன. ரஷ்யா, ஈரான், அஜேபையான் (Azerbaijan), கஜகஸ்தான் Kazakhstan), ரேர்க்மென்ஸ்ரான் (Turkmenistan) ஆகிய ஐந்து நாடுகளுமே காஸ்பியன் கடலை பங்கிட சுமார் 20 வருட பேச்சுவார்த்தைகளின் பின் இணங்கி உள்ளன.
.
USSR காலத்தில் காஸ்பியன் கடல் ரஷ்யா, ஈரான் ஆகிய இரண்டு நாடுகளால் மட்டுமே சூழ்ந்திருந்தது. USSR உடைவின் பின் மற்றைய 3 நாடுகளும் தோன்றி உள்ளன.
.
மேலும் காஸ்பியனை கடல் (sea) என்பதா, அல்லது வாவி (lake) என்பதா என்பதிலும் குழப்பம் உள்ளது. காஸ்பியனை கடல் என்று அழைத்தால், அது ஐ. நாவின் United Nations Law of Sea என்ற சட்டத்துள் அடங்கிவிடும். அந்த சட்டம் உலகின் மற்றைய நாடுகளும் காஸ்பியன் மீது உரிமை கொள்ள வழி செய்துவிடும். அது ஒரு வாவி (lake) என்றால், ஐ. நாவின் கடல் தொடர்பான சட்டத்துக்குள் அமையாது. தற்போது காஸ்பியன் ஒரு ‘விசேட’ நீர் நிலையாக கருதப்படுகிறது.
.
காஸ்பியன் சுமார் 370,000 சதுர km பரப்பளவு கொண்டது. இதற்கு அடியில் சுமார் 50 பில்லியன் பரல்கள் எண்ணெய்யும் (oil), 8.4 டிரில்லியன் கன மீட்டர் இயற்கை வாயுவும் (natural gas) உள்ளது. இன்று ஏற்பட்ட இணக்கம் காரணமாக விரைவில் எரிபொருள் அகழ்வுகள் இங்கு ஆரம்பமாகலாம்.
.
அத்துடன் உலகின் 90% காவிஆர் (caviar) இங்கிருந்தே பெறப்படுகிறது. இங்குள்ள sturgeon என்ற பெரிய அளவிலான மீன்களின் வயிற்றில் உள்ள முட்டை (caviar) பெரும் விலைக்கு விற்பனை செய்யப்படும்.
.
அமெரிக்காவின் ரம்ப் அரசால் மிரட்டப்படும் ஈரானுக்கு ரஷ்யாவின் உதவி தேவைப்படும் காலத்திலேயே இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இணக்கத்தால் அமெரிக்கா போன்ற வெளி இராணுவங்கள் காஸ்பியனை ஆக்கிரமிப்பது தவிர்க்கப்படுள்ளது.
.