கியூபா செல்கிறார் ஒபாமா

Cuba-Am

அடுத்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கியூபா செல்லவுள்ளார். சுமார் 90 வருடங்களின் பின் பதவியில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி கியூபா செல்வது இதுவே முதல் தடவை. 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவும் கியூபாவும் தம்மிடையே உறவுகளை புதிப்பித்ததன் பின் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல தொடர்புகள் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளன.
.
கடந்த வருடம் இரு தரப்பும் தூதுவர் மனைகளை ஆரம்பித்து இருந்தன. மார்கழியில் இரண்டு நாடுகளும் தமக்குள் தபால் சேவையை ஆரம்பித்து இருந்தன.
கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு நாடுகளுக்கும் இடையில் பயணிகள் விமான சேவைகள் ஆரம்பிக்க உடன்படிக்கை செய்யப்பட்டு இருந்தது. அந்த உடன்படிக்கையின்படி சுமார் 100 தினசரி விமான சேவைகளை நடைமுறைப்படுத்தப்படும்.
.
ஒபாமா ஆட்சியில் பாரிய எதிர்ப்புகள் எதுவும் இன்றி நடைமுறையான கொள்கை கியூபா மீதான தடையை நீக்கியதே.
.