கியூபா பிடெல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை

Fidelito

கியூபாவின் முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோவின் மகன் Fidel Castro Diaz-Balart தனது 68ஆவது வயதில் தற்கொலை செய்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இன்று வியாழன் தற்கொலை செய்துகொண்டவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, வைத்தியம் பெற்று வந்துள்ளார்.
.
இவர் தனது தந்தையார் போன்ற உருவத்தை கொண்டிருந்ததனால் பலரும் இவரை Little Fidel அல்லது Fidelito என்று அழைத்தனர். இவரது தாயாருக்கும், தந்தையார் பிடெல் காஸ்ரோவுக்கும் இடையிலான திருமணம் சிறுகாலத்துள் முடிவடைந்தது. இவர் தனது 5 வயதில் விவாகரத்து செய்த தாயாருடன் அமெரிக்கா சென்றிருந்தார். ஆனால் சிலகாலத்தின் பின்னர் இவர் கியூபா திரும்பி இருந்தார்.
.
சோவியத் யூனியனில் கல்வி கற்ற இவர் ஒரு அணு விஞ்ஞானி. இவர் ஸ்பானிஸ், ஆங்கிலம், பிரென்ச், ரஷ்யன் ஆகிய மொழிகளில் ஆற்றல் கொண்டவர்.
.
1980களில் கியூபாவில் அணு ஆலைகளை அமைக்கும் பணியை இவர் தலைமை தாங்கி இருந்தார். ஆனால் சோவியத் உடைவின் பின் சோவித்திலிருந்தான பொருளாதார உதவிகள் தடைப்பட, இவரின் முக்கியத்துவமும் அழிந்து போனது.
.