கிரேக்கத்தில் 3500 வருடங்கள் பழமைவாய்ந்த நகைகள்

3500BC

Greece நாட்டின் தென் பகுதியில் உள்ள Peloponnese குடாவில் சுமார் 3500 வருடங்கள் பழமைவாய்ந்த (1,500 B.C .) தங்க, வெள்ளி, பித்தளை நகைகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் University of Cincinnatiதலைமையில் இந்த அகழ்வு இடம்பெற்றுள்ளது. இவை Bronze Age காலத்தானவையாக இருக்கலாம் என்று கூறப்படுள்ளது.
.
அடையாளம் காணப்படாத படைவீரர் ஒருவரின் உடலின் கீழேயே இந்த நகைகள் காணப்பட்டுள்ளன. அந்த படை வீரரின் வயது 30 முதல் 35 வரையுள் இருந்திருக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகைகள், தலைவாரிகள், குவளைகள் உட்பட்ட பொருட்கள் இங்கு இருந்துள்ளது. அந்நாட்டு கலாச்சார அமைச்சர் இதுவே கடந்த 65 வருடங்களில் அகழப்பட்ட பொருட்களில் மிக முக்கியமானவை என்றுள்ளார்.
.
இந்த 2.4 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் அகலம் கொண்ட கல்லறை 1939 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டு இருந்தது.
.
படம்: University of Cincinnati

.