கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனர் தலைநகர், OIC அறிவிப்பு

Jerusalem

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் முழு ஜெருசலேம் நகரும் இஸ்ரவேலின் தலைநகர் என்று அறிவித்ததுடன், அங்கு அமெரிக்காவின் தூதுவராலயத்தை நகர்த்த அறிவிப்பு விடுத்ததை தொடர்ந்து இஸ்லாமிய நாடுகள் இன்று கிழக்கு ஜெருசலேமை (East Jerusalem) பாலத்தீனியர் தலைநகர் என்று அறிவித்துள்ளன.
.
துருக்கியில் கூடிய Organization of Islamic Cooperation (OIC) என்ற 57 இஸ்லாமிய நாடுகளை அங்கத்துவம் கொண்ட அமைப்பு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. அதேவேளை ரம்பின் தீர்மானத்தை அமெரிக்காவும், இஸ்ரவேலும் மட்டுமே இன்றுவரை ஆதரித்து உள்ளன.
.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற அவசரகால அமர்வு ஒன்றை கூட்டி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மற்றைய நாடுகளையும் கிழக்கு ஜெருசலேமை பாலத்தீனர் தலைநகராக ஏற்கும்படி இந்த அமைப்பு கேட்டுள்ளது.
.
இந்த மாநாட்டுக்கு ஈரான், ஜோர்டான், கட்டார், குவைத் ஆகிய பல நாடுகள் தமது நாட்டு தலைமைகளை அனுப்பி இருந்தன. ஆனால் சவுதியும், UAEயும் தமது அமைச்சர்களை மட்டுமே அனுப்பி இருந்தன. அண்மை காலங்களில் சவுதியும், இஸ்ரவேலும் மத்தியகிழக்கில் புதிய நண்பர்களான காணப்படுகின்றனர்.
.