குஜராத்தில் பா.ஜ.க 99 ஆசனங்களுடன் பெரும்பான்மை

Gujarat

குஜராத் மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலின் வாக்கு கணக்கெடுப்பு இன்று நிகழ்ந்துள்ளது. இறுதியான கணக்கெடுப்புகளின்படி இந்திய பிரதமர் மோதி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி 99 ஆசனங்களை பெற்று பெரும்பான்மை அரசை அமைக்கவுள்ளது. இந்திரா காங்கிரஸ் 80 ஆசனங்களை பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தின் மொத்த ஆசனங்கள் 182.
.
இம்முறை பா.ஜ.க. 99 ஆசனங்களை பெற்றிருந்தாலும் இத்தொகை முன்னைய தொகையிலும் 16 ஆசனங்கள் குறைவானதே. கடந்த தேர்தலில் பா.ஜ.க. இங்கு 115 ஆசனங்களை வென்றிருந்தது.
.
ஹிமாச்சல் மாநிலத்து (Himachal Pradesh) தேர்தலிலும் பா.ஜ.க. 44 ஆசனங்களை பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்திரா காங்கிரஸ் 21 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது. ஹிமாச்சல் மாநிலத்தின் மொத்த ஆசனங்கள் 68.
.

குஜராத் தேர்தலில் மோதி சுமார் 20 பிரச்சார கூட்டங்களை நடாத்தி இருந்தார். இந்திய பிரதமர் ஆகுமுன் மோதி இங்கே மாநில ஆட்சி செய்திருந்தார்.
.