கேரளாவில் 21  வயது பெண் நகர முதல்வர்

கேரளாவில் 21  வயது பெண் நகர முதல்வர்

Arya Rajenran என்ற 21 வயது பெண் கேரளாவின் திருவானந்தபுர நகரின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டு உள்ளார். இவர் ஒரு Communist Party of India (Marxist) உறுப்பினர். இவருக்கு முன் இந்தியாவில் Sabitha Beegum என்பவர் தனது 23ம் வயதில் முதல்வர் ஆக இருந்துள்ளார்.

இன்று திங்கள் திருவனந்தபுரத்தில் Arya முதல்வராக பதிவி ஏற்றுள்ளார். திருவானந்தபுரமே கேரளாவின் மிக பெரிய நகரம் ஆகும். அவையில் இருந்த மொத்தம் 99 வாக்குகளில் இவருக்கு 51 வாக்குகள் கிடைத்துள்ளன.

இங்கு கடுமையாக பரப்புரை செய்த பா.ஜ. கட்சிக்கு 34 ஆசங்களே கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி 10 ஆசனங்களை வென்று 3ம் இடத்தில் உள்ளது.

பெருமளவு இளம் வாக்காளர் தமக்கு வாக்களித்தால் தாம் இளையவர் ஒருவரை முதல்வர் ஆகியுள்ளதாக கட்சி கூறுகின்றது.