கொத்தபாயா மீது அமெரிக்காவில் மேலும் வழக்குகள்

SriLankaFlag

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொத்தபாயா ராஜபக்சவுக்கு எதிராக மேலும் 10 முன்னாள் இலங்கையர்கள் அமெரிக்காவில் புதிதாக 10 வழக்குகளை நேற்று 26 ஆம் திகதி தாக்கல் செய்து உள்ளனர். இவர்களில் 8 பேர் தமிழர் என்றும் 2 பேர் சிங்களவர் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்னரும் சில வழக்குகள் கொத்தபாயாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
.
இந்த வழக்குகள் கொத்தபாயா அமெரிக்க குடி உரிமையை இழப்பதை பலகாலம் இழுபட வைக்கலாம். அதனால் அவர் இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பங்கு கொள்ள முடியாமலிருக்கும். இரட்டை குடியிருமை கொண்ட இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அமெரிக்க குடியுரிமையை இழப்பது அவசியம்.
.
இவருக்கு எதிரான வழக்குகளை தென்னாபிரிக்க அமைப்பான ITJPயும் (International Truth and Justice Project), அமெரிக்க சட்ட நிறுவனமான Hausfeldஉம் தாக்கல் செய்துள்ளன. புதிய வழக்குகள் 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலத்து குற்றச்சாட்டுக்களை கொண்டுள்ளன.

.