கொலம்பஸ்சை கைவிடும் அமெரிக்கா

USFlag

1492 ஆம் ஆண்டில், இந்தியாவை நோக்கி பயணித்த இத்தாலியர் கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Christoper Columbus) அமெரிக்காவை அடைந்து இருந்தார். அமெரிக்காவுக்கான அவரின் வருகை ஐரோப்பியர் அமெரிக்கா கண்டம் முழுவதும் பரவ காரணியாக இருந்தது.
.
தமக்காக புதிய கண்டம் ஒன்றை கைப்பற்றிய கொலம்பஸ் ஐரோப்பியரால் அண்மைவரை புகழ்பாடப்பட்டு வந்தார். ஆனால் அந்த புகழ்பாடல் தற்போது அழிய ஆரம்பித்து உள்ளது.
.
மிக நீண்ட காலமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட கொலம்பஸ் தினம் (Columbus Day) தற்போது பல நகரங்களில் பூர்வீக மக்கள் தினமாக (Indigenous People Day) மாற்றப்பட்டு உள்ளது.
.
அமெரிக்க மத்திய அரசின்படி தற்போதும் கொலம்பஸ் தினம் ஒரு விடுமுறை தினம். நேற்று அக்டோபர் 14 சில இடங்களில் கொலம்பஸ் தினம் கொண்டாடப்பட, வேறு இடங்கள் பூர்வீக மக்கள் தினத்தை கொண்டாடின. ஆனால் விரைவில் அந்நிலை மாறலாம்.
.
பெறுமதி இல்லாத ஒரு தினத்தை பூர்வீக மக்களுக்கு வழங்கும் இன்றைய மக்கள் சிறிது நிலத்தையும் வழங்கி பூர்வீக மக்கள் நாடு ஒன்றை ஆரம்பிப்பார் என்று கூற முடியாது.
.