கொலம்பியா PARC சமாதானத்தில்

FARC

கடந்த சுமார் 50 வருடங்களாக கொலம்பியா (Colombia) அரசுடன் யுத்தத்தில் ஈடுபட்டு வந்திருந்த இடதுசாரிகளான PARC (Revolutionary Armed Forces of Colombia) இயக்கம் முழுமையான சமாதானத்துக்கு இணங்கியுள்ளது. அண்மையில் அரசு வழங்கிய தீர்வை ஏற்பதா அல்லது மறுப்பதா என்று PARC தம்முள் ஒரு கருத்து வாக்கெடுப்பை நடாத்தி இருந்தது. அப்போது பெருமளவு FARC உறுப்பினர்கள் சமாதானத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த FARC தலைவர் சமாதானம்தான் மிக அழகான வெற்றி என்றுள்ளார் (Peace is the most beautiful of victories).
.
சமாதான உடன்படிக்கையின்படி FARC ஒரு புதிய அரசியல் கட்சியாக மாறும். அத்துடன் 2026 ஆண்டுவரை FARC 10 பாராளுமன்ற ஆசனங்களை போட்டியிடாது பெற்றுக்கொள்ளும்.
.
FARC தனது ஆயுத நடவடிக்கைகளை 1964 ஆம் ஆண்டில் ஆரம்பித்து இருந்தது. Cold-war காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழு Marxist-Leninist குழுவாக இயங்கியது. இதை அடக்க அமெரிக்கா பில்லியன் அளவான உதவிகளை கொலம்பியா அரசுக்கு செய்திருந்தது. இந்த யுத்தத்துக்கு இதுவரை சுமார் 250,000 உயிர்கள் பலியாகி இருந்துள்ளன. மேலும் சுமார் 50,000 பேர் காணாமல் போய்யுள்ளனர்.
.
ஐ. நா. அறிக்கை ஒன்றின்படி 12% கொலைகளை FARC செய்துள்ளது. மிகுதி 88% கொலைகளை அரசும், அரசு ஆதரவு குழுக்களும் செய்துள்ளது.
.
Human Right Watch அறிக்கை ஒன்றின்படி 20-30% அளவிலான FARC உறுப்பினர்கள் 18 வயதுக்கும் குறைந்தவர்கள். இவர்கள் கட்டாயமாக இணைத்து கொள்ளப்பட்டவர்கள்.
.
2002 ஆண்டு அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் IRA (Iris Republican Army) இயக்கம் FARC குழுவுடன் இணைந்து செயல்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. சுமார் 15 IRA உறுப்பினர்கள் கொலம்பியா சென்று FARC சென்று வந்ததாக கூறப்பட்டு இருந்தது. அத்துடன் IRA சுமார் $2 மில்லியனை போதை வர்த்தகம் வருமானத்தில் இருந்து பெற்றதாகவும் கூறப்பட்டு உள்ளது.
.