கொழும்புக்கு போட்டியாக தமிழ்நாட்டில் துறைமுகம்?

Colachel

தமிழ்நாட்டின் நாகர்கோவிலுக்கு அண்மையில் உள்ள Colachel  என்ற இடத்தில் பெரிய துறைமுகம் ஒன்றை அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு போட்டியாக அமையலாம். ஆனால் கொழும்பில் இருந்து வாய்ப்புக்களை இந்த புதிய துறைமுகம் பறிக்கும் வல்லமை அற்றதாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கொழும்பு வழங்கும் குறைந்த செலவிலான சேவையை தமிழ்நாடு வழங்க முடியாது என்று கூறப்படுகிறது.
.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய நாணயங்கள் 27,000 கோடி வரை தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.
.
கொழும்பின் வாடிக்கையாளர்களை பறித்து எடுப்பதற்கு பதிலாக இந்த புதிய துறைமுகம் சென்னை உட்பட்ட மற்றைய இந்திய துறைமுகங்களில் இருந்து வாடிக்கையாளர்களை பறிக்கக்கூடும்.
.

கொழும்பு துறைமுகத்தின் புவியியல் நிலையம் கப்பல் போக்குவரத்து சேவைக்கு சிறந்ததாக உள்ளது. கொள்கலன்களை ஒரு கப்பலில் இருந்து இன்னோர் கப்பலுக்கு மாற்றும் சேவை பெரும் வருமானத்தை வழங்கக்கூடிய சேவையாகும்.
.