கோகினூர் வைரம் பிரித்தானியாவுடையது என்கிறது இந்தியா

Koh-i-noor

உலகிலேயே மிகப்பெரிய வைரமாகிய கோகினூர் (koh-i-noor) வைரம் பிரித்தானியாவுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு என்கிறது தற்போதைய இந்திய அரசு.
.
இந்த வைரத்தின் ஆரம்பம் திடமாக தெரியாதுவிடினும், இது 13 ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் உள்ள Guntur என்ற இடத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று பொதுவாக கருதப்படுகிறது. வேறு சிலர் இதை 5,000 ஆண்டுகள் பழமையானது (3000 BC) என்கின்றனர்.
.
ஆரம்பத்தில் 793 கரட் (158.6 கிராம்) எடை கொண்ட இது பல்வேறு ஆட்சியாளர் கைமாறி இறுதியில் பிரித்தானிய இராணியின் உடமையாக உள்ளது. கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் இந்த வைரத்துக்கு உரிமை கொண்டாடி இருந்தன.
.
சுதந்திரத்தின் பின், 1947 ஆம் ஆண்டில், இந்தியா இவ்வைரம் தமக்கு திருப்பி தரப்படவேண்டும் என்று கூறி இருந்தது. பின்னரும் பலதடவைகள் இந்த வைரத்தை திருப்பி தருமாறு இந்தியா கேட்டிருந்தது. ஆனால் பிரித்தானிய அதை மறுத்து வந்திருந்தது.
.
இதை திருப்பி பெற All India Human Rights and Social Justice Front என்ற அமைப்பு அண்மையில் இந்திய நீதிமன்றில் ஒரு வழக்கையும் தாக்கல் செய்தது. ஆனால் அந்த வழக்குக்கு கருத்து தெரிவித்த இந்திய அரசு இந்த வைரம் Ranjit Singh என்பவரால் இந்தியாவுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது என்றுள்ளது. இது முன்னைய இந்திய அரசுகள் கொண்டிருந்த கருத்துக்கு முரணானது.
.