சந்திரனில் வலம்வரும் சீனாவின் Jade Rabbit

JadeRabbit

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் அடுத்ததாக சீனாவின் rover சந்திரனில் வலம்வருகிறது. Long March 3B என்ற ஏவுகலனில் எடுத்துச்செல்லப்பட்ட Chang’e 3 என்ற தரையிறங்கும் கலனில் பயணித்த Jade Rabbit என்ற rover தற்போது சந்திரனில் வலம் வந்துகொண்டிருக்கிறது. 1976 ஆம் ஆண்டுக்கு பின் சென்ற rover என்றபடியால் சந்திரனில் இருந்து தரமான புகைப்படங்களை Jade Rabbit அனுப்பலாம் என எதிர்பார்க்கலாம்.

இது இந்த மாதம் 2 ஆம் திகதி (2 December 2013) அனுப்பப்பட்டிருந்தது. இது சனிக்கிழமை 13:10 UTC இக்கு சந்திரனில் தரை இறங்கியது. இந்த தரை இறங்கலை சீனாவின் தொலைக்காட்சிகள் நேரடி ஒலிபரப்பு செய்திருந்தன.

சந்திரனுக்கு செல்வதால் பெரிய ஆதாயங்கள் எதுவும் இல்லை என்றாலும் இவ்வகை செயல்பாடுகள் அதீத அறிவுகளை செயல்முறையில் உறுதி செய்ய உதவுகிறது.

சீனா தனது சொந்த வின் ஆய்வுகூடத்தை 2020 ஆம் ஆண்டவில் பணியில் ஈடுபடுத்தும் என கூறப்பட்டுள்ளது. தற்போது செயல்பாட்டில் இருக்கும் சர்வதேச வின் ஆய்வுகூடத்தில் (International Space Station) அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் இயங்கினாலும் சீனா மட்டும் அனுமதிக்கப்படவில்லை. சீனாவுக்கான அனுமதியை அமெரிக்காவே மறுத்திருந்தது.

படம்: CCTV