சவுதிக்கு தீவுகளை வழங்கிய எகிப்தின் சிசி

StraitsOfTiran

அண்மையில் சவுதியின் தலைவர் King Salman எகிப்து சென்றபோது அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில், Tiran நீரிணைக்கு மேலாக, பாலம் ஒன்று அமைக்கும் திட்டம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. உண்மையில் இந்த அறிவிப்புக்கு பின்னால் பல இரகசியங்கள் இருந்தமை இப்போது தெரியவந்துள்ளது.
.
சவுதிக்கும் எகிப்துக்கும் இடையில், Tiran நீரிணையும் செங்கடலும் சந்திக்கும் பகுதியில் இரண்டு குடியிருப்புகள் அற்ற தீவுகள் உள்ளன. இந்த இரண்டு தீவுகளும் 1950 ஆம் ஆண்டு முதல் எகிப்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது. ஆனால் அந்த தீவுகளை எகிப்தி ஜானதிபதி சிசி (Sisi) சவுதிக்கு வழங்கியுள்ளார். புதிய பாலம் இந்த இரு தீவுகளினூடும் செல்லும். இதை அறிந்த எகிப்தின் மக்கள் சிலர் இன்று ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளனர். சிசி இதுபற்றி பாராளுமன்றத்துக்கும் தெரிவித்து இருக்கவில்லை.
.
சவுதி, இஸ்ரவேல் மற்றும் மேற்கு நாடுகளின் உதவியுடன், முன்னைய ஜனநாயக முறைப்படி பதவிக்கு வந்திருந்த அரசை கலைத்து தமது கைப்போமையான சிசியை பதவிக்கு கொண்டுவந்திருந்தது. சிசியும் ஒரு முபாரக் II போல் செயல்பட்டு வருகிறார். சவுதி, இஸ்ரவேல் போன்ற நாடுகளின் உதவி இன்றி சிசி பதவியில் இருக்க முடியாது.
.

அது மட்டுமன்றி இஸ்ரவேலும் இந்த பாலம் அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகூட ஒரு ஆச்சரியப்படக்கூடிய விடயமே. பகிரங்கத்தில் எதிரிகள் போல் சவுதியும் இஸ்ரவேலும் நடந்து கொண்டாலும், மறைவில் நட்புடன் செயல்படுவது இங்கு தெரிகிறது.
.