சவுதி எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல்

Saudi

சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மீது இன்று சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் (drones) தாக்கியதில் சவுதியின் எண்ணெய் உற்பத்தி 50% ஆல் தடைப்படுள்ளது என்று கூறப்படுகிறது.
.
தாமே இந்த தாக்குதலை செய்ததாக யெமன் நாட்டில் போராடும் Houthi என்ற ஆயுத குழு கூறியுள்ளது. தாம் 10 ஆளில்லா விமானங்களை ஏவியதாகவும் கூறியுள்ளது மேற்படி குழு.
.
யெமென் அரசுக்கு சவுதி உதவுவதாலும், தம் மீது சவுதி பெருமளவு தாக்குதல்களை செய்வதாலும் மேற்படி குழுவுக்கும் சவுதிக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. அதேவேளை Houthi குழுவுக்கு சவுதியின் எதிரி ஈரான் உதவி வருகிறது.
.
மேற்படி தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் சவுதி அரச நிறுவனமான Aramco வுக்கு சொந்தமானவை. யெமென் என்றார் நாடு சவுதியின் தெற்கே இருக்க, தாக்குதல்கள் இடம்பெற்ற Khurais (உலக உற்பத்தியின் 1%), Abqaiq (உலக உற்பத்தியின் 7%) ஆகிய சவுதி நகரங்கள் சவுதியின் வடக்கே உள்ளன. அதனால் சவுதிக்கு உள்ளேயிருந்தும்  இந்த தாக்குதக்களுக்கு உதவிகள் கிடைத்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
.