சவுதி Hajj நெரிசலில் 717 யாத்திரிகர் பலி

Mina

சவுதி அரேபியாவில் ஹஜ் (hajj) யாத்திரிகர் 717 பேர் நெரிசல் காரணமாக பலியானதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. சவுதி அரேபியாவின் Meccaவுக்கு அருகில் உள்ள Mina என்ற நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
.
இதுபற்றி கருத்து தெரிவித்த சவுதியின் சுகாதார அமைச்சர், ஆபிரிக்காவில் இருந்து வந்த யாத்திரிகர் ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்காமையே இந்த சம்பவத்துக்கு காரணம் என்றுள்ளார்.
.
ஒரு கிழமைக்கு முன் இங்கு ஒரு பாரம் தூக்கி விழுந்ததால் 107 பேர் பலியாகி இருந்தனர்.
.

2006 ஆம் ஆண்டில் இங்கு இவ்வகை நெரிசலுக்கு 350 யாத்திரிகர் பலியாகி இருந்தனர். 2004 ஆம் ஆண்டில் 244 யாத்திரிகர் பலியாகி இருந்தனர்.
.