சாலமன் தீவு பகுதியில் 8.0 நிலநடுக்கம்

இன்று புதன்கிழமை சாலமன் தீவுகளுக்கு அண்மையில் 8.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நடுக்கம் 1.5 மீட்டர் உயர அலைகளை உருவாக்கி இருந்தாலும் பாதிப்புகள் அதிகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்துக்கு அண்மையில் உள்ள Vanuath என்ற இடத்தில் 11 cm வரையான அலைகள் தென்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் நிலைய கூற்றுப்படி இந்த நிலநடுக்கம் Lata என்ற இடத்தில் இருந்து 81 km மேற்கே, 5.8 km ஆழத்தில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 200 தீவுகளை கொண்ட சாலமன் தீவுகளின் சனத்தொகை சுமார் 550,000. 2007 ஆம் ஆண்டில் இங்கு ஏற்பட்ட 8.1 அளவிலான நிலநடுக்கத்துக்கு 50 பேர் வரை பலியாகி இருந்தனர்.