சிரியாவில் 4 குண்டுகளுக்கு 140 பேர் பலி

Syria

சிரியாவில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெற்ற 4 குண்டு தாக்குதல்களுக்கு 140 பேர் வரை பலியாகியுள்ளதுடன் 200 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். சிரியாவின் டமாஸ்கஸ் (Damascus) மற்றும் Homs ஆகிய நகர்களிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்று உள்ளன. அவற்றில் இரண்டு கார் குண்டு தாக்குதல்கள் என்றும் இரண்டு தற்கொலை தாக்குதல்கள் என்றும் கூறப்படுகிறது.
.
இந்த நகர்களில் பெரும்பாலும் அசாத் ஆதரவு மக்களே குடியுள்ளனர். இந்த நகர்கள் முன்னரும் பலதடவைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்தன. கடந்த மாதம் Damascus நகரில் இடம்பெற்ற 3 தாக்குதல்களுக்கு 45 பேர் வரை பலியாகி இருந்தனர்.
.
Islamic State (IS) இந்த தாக்குதல்களுக்கு உரிமை கூறியுள்ளது.

.