சிரியாவுக்கு யுத்த நிறுத்தம் வருகிறதாம்

Syria

மேற்கும், சவுதி போன்ற மேற்கு சார் அரபு நாடுகளும் தமக்கு உடன்படாத சிரியாவின் தலைவர் Assad தலைமையிலான அரசை கவிழ்த்துவிட்டு தமது கைப்பொம்மை அரசை அமைக்க ஒரு உள்நாட்டு யுத்தத்தை உருவாக்கி இருந்தனர். யுத்தம் நீண்டு சென்றபோதும், பல்லாயிரக்கணக்கானோர் மாண்ட போதும், Assad பதவி விலகும்வரை யுத்த நிறுத்தம் இல்லை என்றும் பிடிவாதமாக இருந்தனர் இவர்கள்.
.
ஆனால் பிள்ளையார் பிடிக்க பூதம் வந்ததுபோல் இந்த யுத்தத்தால் உருவான ஆட்சியில்லாத பாகங்களில் தோன்றியது IS என்ற பயங்கரவாத குழு. அக்குழு உருவாக்கிய ஐரோப்பா நோக்கிய அகதிகள் பிரச்சனையும்,  அண்மையில் பிரான்சில் அக்குழு நடாத்திய படுகொலைகளும் மேற்கின் Assad மீதான கொள்கையை கைவிட வைத்துள்ளன. Assad ஆட்சியில் இருந்தாலும் IS அழிந்தால் போதும் என்று விரும்பும் நிலைக்கு மேற்கு தள்ளப்படுள்ளது.
.
கடந்த சில நாட்களாக அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஈரான் போன்ற நாடுகள் நடாத்திய போச்சுவார்த்தைகளின் பிரகாரம் அடுத்துவரும் சில நாட்களில் சிரியாவில் ஒரு யுத்த நிறுத்தம் தோன்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இந்த யுத்த நிறுத்தம் 15 நாட்கள் நீடிக்கும், நிலைமை சாதகமாக இருப்பின் யுத்த நிறுத்தம் மேலும் தொடரும். இந்த யுத்த நிறுத்த காலத்தில் Assad தொடர்ந்தும் பதவியில் இருப்பார்.
.
ஆனால் IS உட்பட வேறுபல குழுக்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து இருக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து சண்டையிடுவர்.
.