சீனாவின் இரண்டாவது கரோனா மருந்துக்கும் அனுமதி

சீனாவின் இரண்டாவது கரோனா மருந்துக்கும் அனுமதி

சீனா அந்நாட்டில் தயாரிக்கப்படும் இரண்டாம் கரோனா தடுப்பு மருந்தான CoronaVac மருந்தையும் மக்களுக்கு ஏற்ற வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கி உள்ளது. இந்த மருந்து Sinovac Biotech Ltd என்ற சீன நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகிறது.

சீனாவில் ஏற்கனவே Sinopharm என்ற சீன நிறுவனம் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்தான SinoVac க்கு கடந்த ஜூன் மாதம் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த மருந்து ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் ஏற்கனவே மக்களுக்கு ஏற்றப்படுகிறது. அவற்றுள் சீனா, ஹாங் காங், துருக்கி, Ukraine ஆகினாவும் அடங்கும்.

பிரேசில் 100 மில்லியன் சீன தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்கிறது. துருக்கி 50 மில்லியன் மருந்துகளை கொள்வனவு செய்துள்ளது. அதேவேளை பிரேசில் தயாரிக்கவுள்ள AstraZeneca தடுப்பு மருந்துக்கு தேவையான 88 லிட்டர் மூலப்பொருளும் சீனாவில் இருந்து இன்று சனிக்கிழமை பிரேசில் சென்றுள்ளது. அது 2.8 மில்லியன் AstraZeneca மருந்துகளை தயாரிக்க போதுமானது.

சீனாவின் 3ம், 4ம் தடுப்பு மருந்துகள் தற்போதும் பரிசோதிப்பில் உள்ளன. அவை தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும், படையினருக்கும் மட்டும் ஏற்றப்பட்டு உள்ளன.

மேற்கு நாடுகள் சீன, ரஷ்ய கரோனா தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்யவில்லை.

இதுவரை தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்துகளில் 75% மருந்துகளை 10 பலமான நாடுகள் பெற்றுக்கொண்டுள்ளன என்கிறது WHO. அத்துடன் 130 நாடுகளுக்கு எந்த மருந்தும் இதுவரை செல்லவில்லை. வறிய நாடுகள் ஐ.நா. வழங்கவுள்ள இலவச மருந்தை எதிர்பார்த்து உள்ளன.