சீனாவின் உதவியை நாடுகிறது அமெரிக்க நாசா

Change4

அமெரிக்காவின் NASA முதல் முறையாக சீனாவின் தொழில்நுட்ப உதவியை நாடுகிறது. இந்த மாதம் 3 ஆம் திகதி (2019-01-03) சீனா Chang’e 4 என்ற தனது விண்கலத்தை சந்திரனின் மறுபக்கத்தில் தரையிறக்கி இருந்தது. அமெரிக்காவோ அல்லது ரஷ்யாவோ இந்த சாதனையை இதுவரை செய்திருக்கவில்லை.
.
ஆனால் சந்திரனின் மறுபக்கத்தில் தரை இறங்கும் விடயத்தில் அமெரிக்கா தற்போது சீனாவின் உதவியை நாடியுள்ளது. குறிப்பாக சீனாவின் தரவுகளை பயன்படுத்தி அமெரிக்கா தனது தரையிறங்கலை திட்டமிடவுள்ளது நாசா (NASA). இவ்வாறு சீனாவின் தொழில்நுட்பத்தை நாசா பயன்படுத்த முனைவது இதுவே முதல் தடவை.
சீனாவின் China Lunar Exploration Programme அமைப்பின் அதிகாரி Wu Yanhua இந்த செய்தியை நேற்று தெரிவித்து இருந்தார். இன்று நாசா அதே செய்தியை உறுதி செய்துள்ளது.
.
சீனாவுடன் இணைந்து அமெரிக்காவின் அதியுயர் தொழில்நுட்ப அமைப்புகள் செயல்பட தடை சட்டம் ஒன்று உள்ளது, அந்த தடையை மீறி நாசா செயப்படுவதாயின், அது ஏற்கனவே அமெரிக்க காங்கிரசினதும், அமெரிக்க ஜனாதிபதியினதும் நாசா அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.

.