சீனாவின் புதிய Operating System COS

CAS

இலத்திரனியலில் OS என்று சுருக்கமாக அழைக்கப்படும் Operating System முதல் முக்கியமானது. Hard drive, keyboard, mouse, screen, memory போன்ற hardware களையும் word, excel, power-point, browser போன்ற software களையும் இணைக்கும் பணியை செய்வது OS. 1950 ஆண்டுகளில் OS என்ற பாகம் தோன்றியிருந்தாலும் அவை இன்றைய OS களைப்போல் வல்லமையானவையாக இருந்திருக்கவில்லை. DOS என்ற OS வீட்டுக்கு வீடு கணணியை வைத்திருக்க முதலில் உதவியது. DOS ஐ கொள்வனவு செய்த Microsoftநிறுவனம் பின்னர் அதை Window OS என அழைத்தது. இது Microsoft முதன்மை உரிமையாளர் Bill Gate ஐ பல்லாண்டு காலம் உலகின் முதலாவது பணக்காரர் ஆக்கியது.

Unix, MacOS போன்ற சில மாற்று OS கள் உருவாக்கப்பட்டு இருந்திருந்தாலும் Microsoft 95% வரையிலான கணணிகளை தன்வசம் வைத்திருந்தது. பின்னர் வந்த smart phone களில் உள்ள OS கள் Microsoft இன் ஆளுமையை முறியடித்தன. மிக பிரபலமான iPhone, iOS ஐ கொண்டுள்ளது.

மேலே கூறப்பட்ட OS கள் எல்லாம் பொதுவாக அமெரிக்காவை தளமாக கொண்டவை. ஆனால் இப்போது சீனாவை தளமாக கொண்ட OS ஒன்று வெளிவந்துள்ளது. Linux kernel ஐ அடிப்படையாக கொண்ட இதற்கு COS (China Operating System) என பெயர் இடப்பட்டுள்ளது.

சீனவிக்கு வெளியே COS வெளிநாட்டு OS களை முறியடிக்காவிட்டாலும் சீனாவிக்குள் COS பலம் பெறக்கூடும். இதற்கு சில காரணங்கள் உண்டு. அமெரிக்காவை தளமாக கொண்ட பல OS களின் உதவிகளை பயன்படுத்தி அமெரிக்காவின் NSA (National Security Agency) உலகெங்கும் உள்ள பல கணணிகளை பயன்படுத்தி பாரிய உளவு வலையமைப்பை செய்துள்ளமை Sonwden மூலம் தெரிய வந்திருந்தது. இதில் இருந்து அமெரிக்க OS களில் சந்தேகம் கொண்டுள்ள சீன தப்ப COS உதவி செய்யலாம். அதனால் சீன அரசு COS பலமாக ஊன்ற உதவி செய்யலாம். சீனாவின் பெரிய தொலைபேசி நிறுவனமாக China Telecom ஏற்கனவே COS ஐ பயன்படுத்தும் smart phone களை தரம் பார்க்க தொடங்கியுள்ளது.