சீனாவின் 2வது விமானம் தாங்கி கடல் சோதனையில்

Liaoning

சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கி கப்பல் இன்று ஞாயிறு ஆழ்கடல் சோதனைகளுக்கு சென்றுள்ளது. முற்றிலும் சீனாவால் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் சீனாவின் முதலாவது விமானம் தாங்கியை ஒத்தது.
.
சீனாவின் முதலாவது விமானம் தாங்கி கப்பல் சோவித் யூனியனால் தயாரிக்கப்பட்டது. ஆனால் சோவித் உடைந்தபோது அக்கப்பல் யுக்கிறேன் நாட்டின் உடமையானது. அந்த கப்பலில் இருந்த இயந்திரம் உட்பட அனைத்து இராணுவ பாகங்களும் கழற்றப்பட்ட நிலையில் 1998 ஆம் ஆண்டில் Hong Kong  மூலம் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. சீனா அதை புனரமைப்பு செய்து தமது முதலாவது விமானம் தாங்கியாக சேவையில் இட்டது.
.
இரண்டாவது விமானம் தாங்கி 2020 ஆம் ஆண்டில் சேவைக்கு வரும் என்று கூறப்படுகிறது. சீனாவின் இரண்டு விமானம் தாங்கிகளும் சுமார் 30 யுத்த விமானங்களை மட்டுமே காவக்கூடியன.
.
சீனா நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட 3வது விமானம் தாங்கி ஒன்றையும் கட்டி வருகிறது.
.
அமெரிக்காவிடம் தற்போது 11 விமானம் தாங்கிகள் சேவையில் உள்ளன. இவற்றில் பல அணுமின் மூலம் இயங்குவன. அத்துடன் சில அமெரிக்க விமானம் தாங்கிகள் 60 யுத்த விமானங்கள் வரை காவக்கூடியன. 2017 ஆம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த அதி நவீன விமானம் தாங்கியான USS Gerald R  Ford சுமார் $13 பில்லியன் செலவில் உருவானது.

.