சீனாவின் ZTE அழிவால் அழுகிறார் ரம்ப்

ZTE

சீனாவின் பெரிய தொழில்நுட்ப நிறுவங்களுள் ஒன்று ZTE. இந்நிறுவனம் network உபகாரங்கள் மற்றும் smartphone ஆகியவற்றை தயாரிக்கிறது. அமெரிக்காவில் ZTE பெருமளவில் network பொருட்களை விற்பனை செய்யாதுவிடினும், ZTE அங்கு பெருமளவு smartphoneகளை விற்பனை செய்கிறது. அமெரிக்க smartpohne விற்பனையில் iPhone (அமெரிக்கா), Samsung (தென்கொரியா), LG (தென்கொரியா) ஆகியவற்றுக்கு அடுத்து, 4ஆம் இடத்தில் உள்ளது ZTE.
.
ஈரான், வடகொரியா ஆகிய நாடுகள் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளையும் மீறி ZTE ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்கு தனது பொருட்களை விற்பனை செய்திருந்தது என்று கூறி அண்மையில் ரம்ப் அரசு ZTE மீது பெரும் தண்டனையை விதித்திருந்தது. அதன்படி ZTE $1.2 பில்லியன் தண்டத்தை அமெரிக்காவுக்கு செலுத்த இணங்கியது. அத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் ZTEக்கு தேவையான chip, software போன்ற பொருட்களை விற்பனை செய்வதும் 7 வருடங்களுக்கு தடை செய்யப்பட்டது.
.
அதனால் ZTE உற்பத்தி இன்றி முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
.
ஆனால் இன்று ஞாயிறு ரம்ப் திடீரென ZTE மீது அனுதாபம் கொண்டுள்ளார். இன்று ஞாயிறு ரம்ப் தனது Twitter பதிவில் “சீன ஜனாதிபதியும் நானும் சீனாவின் பெரிய தொலைபேசி நிறுவனமான ZTE மீண்டும் வர்த்தகத்தில் ஈடுபட வேகமாக செயப்படுகிறோம்” என்றும், ZTE மீதான தடையால் “சீனாவில் அதிகமான தொழில்வாய்ப்புகள் இல்லாமை போயுள்ளன” என்றும், அமெரிக்காவின் “வர்த்தக திணைக்களம் விரைந்து செயல்பட கேட்கப்படுள்ளது” என்றும் கூறியுள்ளார்.
.
ரம்பின் முன்னுக்கு பின் முரணான இந்த நடவடிக்கையால் பலரும் முழிக்கின்றனர். ரம்பின் பின்வாங்கலுக்கு காரணம் அவர் சீனாவிடம் இருந்து  பதிலுக்கு வேறு எதையாவது பெற்றிருக்க வேண்டும் அல்லது சீனாவின் வேறு விடயம் தொடர்பான மிரட்டலுக்கு பயந்து பின்வாங்கி இருக்கவேண்டும். சுயபிரச்சாரத்தின் மன்னனான இவர் எதையாவது பதிலுக்கு பெற்று இருந்தால் உடனடியா அதை வெளியிட்டு தனது திறமையை புகழ்ந்திருப்பார். ஆனால் அவர் அவ்வாறு எதையும் இதுவரை செய்திருக்கவில்லை.

.
சுமார் 75,000 ஊழியர்களை கொண்ட ZTE 160 நாடுகளில் செய்லபடுகிறது.
.
“President Xi of China, and I, are working together to give massive Chinese phone company, ZTE, a way to get back into business, fast. Too many jobs in China lost. Commerce Department has been instructed to get it done!”

— Donald J. Trump (@realDonaldTrump) May 13, 2018
.