சீனாவில் இரசாயன களஞ்சிய விபத்து, 50 வரை பலி

Tianjin

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்குக்கு அண்மையில் உள்ள ரியன்ஜின் (Tianjin) என்ற கைத்தொழில் நிறுவனங்கள் நிறைந்த துறைமுக நகரில் புதன் இரவு நடைபெற்ற விபத்தில் 50 உயிர்கள் வரை பலியாகி உள்ளன. அத்துடன் 700 இக்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர். பலியானவர்களுள் 12 தீயணைப்பு படையினரும் அடங்குவர்.
.
இந்த விபத்து உள்ளூர் நேரப்படி புதன் இரவு 11:30 இக்கு இடம்பெற்றுள்ளது. ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு வெடிப்புகள் இடம்பெற்று உள்ளன. இரண்டாவது வெடிப்பு மிகவும் பெரியது எனவும், இது சுமார் 21 தொன் TNT வெடிமருந்துக்கு நிகரான வெடிப்பை உருவாக்கியது எனவும் கூறப்பட்டுள்ளது. Tianjin துறைமுகம் உலகத்தில் 10வது பெரிய துறைமுகம் ஆகும்.
.
Tianjin2
.
இந்த இடத்தில் Ruihai International Logistics என்ற நிறுவனம் தீ பற்றக்கூடிய இரசாயன பொருட்களை களஞ்சியப்படுத்தி வைப்பதுண்டு. அவ்வாறு வைக்கப்பட்டு இருந்த பொருட்களே இவ்வாறு வெடித்து தீப்பற்றி உள்ளன.
.
இந்த விபத்தில் சுமார் 10,000 இறக்குமதி செய்யப்பட்ட கார்களும் எரிந்து நாசமாகி உள்ளன.