சீனாவில் இருந்து ஸ்பெயினுக்கு ரயில்

SilkRoad

இந்த மாதம் 18 ஆம் திகதி சீனாவின் கிழக்கு எல்லையில் உள்ள YiWu நகரில் இருந்து 82 கொள்கலன்களை ஏற்றிக்கொண்டு ரயில் ஒன்று ஸ்பெயின் நாட்டின் Madrid நகருக்கு புறப்பட்டுள்ளது. சீனாவின் தற்போதை அதிபர் சீ (Xi) இன் திட்டத்துக்கு இணங்க இந்த 6,200 மைல் நீள பயணம் ஆரம்பமாகியுள்ளது. இந்த ரயில் 21 நாட்களில் தனது பயணத்தை Madrid இல் முடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
.
சீனா இரண்டு புதிய silk road களை கட்டியெழுப்ப முனைகிறது. ஒன்று தரைவழி, மற்றையது கடல் வழி. தரைவழி பாதை துருக்கியின் இஸ்தான்புல் ஊடாக செல்லும் என்று அறிவித்திருந்தாலும், 18 ஆம் திகதி புறப்பட்ட ரயில் மொஸ்கோ ஊடாகவே செல்லும். கடல்வழி பாதையில் இலங்கையின் காலி துறைமுகம் முக்கிய பங்களிக்கும்.
.
இந்த திட்டங்களுக்கு ஆரம்ப முதலீடாக சீனா U$ 40 பில்லியனை செலவழிக்கிறது. தற்போது உலகில் மிக நீண்ட ரயில் சேவை இதுவே. இது மொஸ்கோவில் இருந்து ரஷ்யாவின் கிழக்கே உள்ள Vladivostoic என்ற நகர் செல்லும் Trans-Siberian ரயில் சேவையையிலும் நீளமானதாகும்.
.

படம்: Xihua