சீனாவில் வாகனங்களுக்கு மேலால் ஓடும் பஸ்

TEB-1

பெருகிவரும் தனியார் வாகன போக்குவரத்தால் இடர்படும் பொதுசன பஸ் சேவையையை மீட்க சீனாவின் நிறுவனம் ஒன்று புதிய வகை பஸ்களை தயாரிக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை சீனாவின் QinHuangDao நகரில் வெள்ளோட்டம் விடப்பட்ட TEB-1 (Transit Elevated Bus) என்ற பஸ் இரண்டு வாகன பாதைகளுக்கு மேலால் செல்கிறது. கீழே சாதாரண தனியார் வாகனங்கள் செல்கின்றன.
.
சுமார் 16 அடி உயரமான இந்த பஸ், 72 ஆடி நீளமானதும், 26 அடி அகலமானதும் ஆகும். இதில் சுமார் 300 பயணிகள் பயணிக்க முடியும். இதில் பயணிகள் ஏறி இறங்க விசேடமான மேடைகள் நிறுவப்படல் வேண்டும்.
.

பெரு நகர்களின்  எல்லா வீதிகளிலும் இவ்வகை பஸ் சேவை நடைமுறைப்படுத்தப்பட முடியாவிடில், வாகன நெரிசல் அதிகூடிய வீதிகளில் இந்த பஸ் சேவை நன்று பயன்படலாம். அந்த வீதிகளில் குறிப்பிட் ட உயரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் செல்வது தடை செய்யப்படுதலும் அவசியம்.
.