சீனாவில் வாத்து வளர்த்து, கனடாவில் Hotel உரிமை

Metropolitan

சீனாவில் வாத்து வளர்ப்பு மூலம் தனது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்த Chen Mailin என்ற சீனர் தற்போது கனடாவின் வான்கூவர் நகரில் Metropolitan Hotel உரிமையை கொண்டுள்ளார். கனடாவில் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வீடு ஒன்றையும் இவரே கொள்வனவு செய்துள்ளார்.
.
மொத்தம் 213 அறைகளை கொண்ட Metropolitan Hotel உரிமையை இவர் கொண்டது இவர் மீதான வழக்கு ஒன்றின் மூலமே தற்போது பகிரங்கத்து வந்துள்ளது. தரகர் ஒருவர் மூலம் இந்த Hotel கொள்வனவு நடவடிக்கையை ஆரம்பித்து, பின் அவர் நேரடியாகவே கொள்வனவை செய்துள்ளார் என்கிறது நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு.
.
மொத்தம் 17,000 சதுர அடி கொண்ட கனடாவின் வான்கூவர் நகர் பகுதி வீடு ஒன்றையும் இவர் ஐந்து வருடங்களுக்கு முன் C$ 51.8 மில்லியன் பெறுமதிக்கு (U$ 39 மில்லியன்) கொள்வனவு செய்திருந்தார்.
.
இவரின் credit card மூலம் இவரின் மகன் C$ 5.1 மில்லியன் (U$ 3.9 மில்லியன்) பெறுமதியான Bugatti Ciron கார் ஒன்றையும் கொள்வனவு செய்திருந்தார். அந்த காருக்கான வரி மட்டும் C$ 908,343 என்று கூறப்படுகிறது.
.
சீனாவில் 1992 ஆம் ஆண்டில் வாத்து வளர்ப்பு வர்த்தகத்தில் ஆரம்பித்த இவர் பின்னர் அங்கு Hotel, கட்டுமானம் போன்ற வர்த்தகங்களிலும் ஈடுபட்டிருந்தார்.
.