சீனாவில் 1,000 km நிலக்கீழ் நீர் கால்வாய்?

Brahmaputra

சுமார் 1,000 km நீளம் கொண்ட நிலக்கீழ் நீர் கால்வாய் ஒன்றை அமைக்கும் திட்டம் ஒன்றை சீனா ஆராந்து வருவதாக கூறுகிறது South China Morning Post என்ற பத்திரிகை. அவ்வாறு ஒரு கால்வாய் அமையின் இதுவே உலகின் மிக நீள நிலக்கீழ் நீர் கால்வாயாக அமையும். ஆனால் இந்த முயற்சி சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு யுத்தத்தையே ஏற்படுத்தலாம்.
.
இந்த திட்டத்தின் நோக்கம் திபெத்தில் உள்ள Yarlung ஆற்று நீரை சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள Xinjiang பாலைவன பகுதிக்கு எடுத்து செல்வதாகும். சீனாவில் Yarling என்று ஓடும் இந்த ஆறே, இந்தியாவில் பிரம்மபுத்திரா என்ற பெயரை கொண்டது. அதாவது பிரமபுத்திராவின் நீரையே பெருமளவில் சீனா திசைதிருப்ப முனைகிறது. இதை இந்திய ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை.
.
ஆனாலும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எந்தவித ஆற்று நீர் தொடர்பான உடன்படிக்கைகள் இல்லாதவிடத்து இந்தியா சட்ட நடவடிக்கை எதையும் மேற்கொள்ள முடியாது. பங்களாதேசும் இந்த கட்டுமானத்தை விரும்பாது.
.
இந்த விடயத்தை பணயம் வைத்து சீனா பதிலாக வேறு விடயங்களில் இந்தியாவை இணங்கவும் வைக்கலாம்.
.
தற்போது சீனாவின் இந்த முயற்சிக்கு முரணாக இருப்பது இயற்கை மட்டுமே. நிலக்கீழ் கால்வாய் அமையவுள்ள இந்த பகுதி அதிகம் நிலநடுக்கம் இடம்பெறும் இடம் ஆகையால் கட்டுமானம் நில நடுக்கத்தினால் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைதல் வேண்டும். இந்த திட்டத்துக்கு சுமார் US $ 11.7 பில்லியன் செலவாகலாம் என்றும் கூறப்படுகிறது.
.
சீனா தற்போது Yunan பகுதியில் 600 km நீளம் கொண்ட இவ்வகை நிலக்கீழ் நீர் கால்வாய் ஒன்றையும் அமைத்து வருகின்றதாம்.
.
தற்போது உலகில் நீண்ட நிலக்கீழ் நீர் கால்வாய் அமெரிக்காவின் நியூ யோர்க் பகுதியில் உள்ளது. Delaware Aqueduct என்ற இது 13.7 km  நீளமும், 4.1 மீட்டர் விட்டமும் கொண்டது. சீனாவின் Liaoning மாநிலத்து 8.5 km  நீளமான Dahuofang கால்வாய் 8 மீட்டர் விட்டம் கொண்டது.

.