சீனாவும் அமெரிக்கா மீது மூன்றாம் தொகுதி ​வரி

US_China

திங்கள் அமெரிக்காவின் ரம்ப் அரசு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $200 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரியை (tariffs) அறிவித்ததை தொடர்ந்து இன்று சீனாவும் பதில் வரியை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $60 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு சீனா மேலதிக இறக்குமதி வரியை அறவிடும்.
.
அமெரிக்காவின் புதிய வரிகள் இந்த மாதம் 24 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதுபோல் சீனாவின் புதிய வரிகளும் இந்த மாதம் 24 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.
.
சீனாவின் இந்த புதிய வரிகள் சுமார் 5,200 அமெரிக்க பொருட்களுக்கு அறவிடப்படும். அறவிடப்படும் வரி வீதம் 5% முதல் 10% வரையில் இருக்கும்.
.
சீனாவின் வரிகள் குறிப்பாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய மற்றும் பண்ணை பொருட்களையே குறிவைத்துள்ளன. இவை பொதுவாக ரம்ப் ஆதவு கொண்ட அமெரிக்க கிராமப்புறங்களில் உற்பத்தியாகும். அதையும் ரம்ப்  இன்று சுட்டிக்காட்டியும் உள்ளார்.
.